கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் தணித்துவிடப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை வீரமுனை பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 05 வேலைத்திட்டங்கள் மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்தித் திட்டங்களை திறந்து மக்களின் பாவனைக்கு கையளித்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட், அம்பாரை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப், சம்மாந்துறை பிரதேச சபை உப தவிசாளர் வீ.ஜெயசந்திரன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது வீரமுனை மில்லடி வீதி, வீரமுனை குறிஞ்சாமுனை வீதி, வீரமுனை மைதான வடிகான், வீரமுனை அலவாக்கரை வீதியின் வடிகாண், வீரமுனை கண்ணகி வீதியின் தடுப்புச்சுவர் ஆகிய வேலைத்திட்டங்கள் திறந்துவைக்கப்பட்டது.