சாய்ந்தமருதின் முன்னணி விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான பிளைங்ஹோர்ஸ் விளையாட்டுக் கழகமும் பௌஸி மற்றும் கான் விளையாட்டுக் கழகங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த வருடாந்த ஒன்றுகூடல் 2019/2020ஆம் ஆண்டுக்கான நிருவாகிகள் தெரிவு கௌரவிப்பு நிகழ்வு என்பன 2019.12.27 ஆம் திகதி கமு/கமு/அல் ஜலால் வித்தியாலயத்தில் பிளைங்ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆயுள்கால செயலாளர் எஸ்.முகம்மட் கான் அவர்களது வழிகாட்டலின் கீழ் கழகத்தின் தலைவர் ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ் ஐ.எல்.ஏ.மஜீட் அவர்களது தலைமையில் சாய்ந்தமருது பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் ரீ.வசந்த் அவர்களது பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.
பிளைங்ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரான மர்ஹூம் பௌஸி அவர்களுக்காக இரண்டு நிமிட மௌனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் வரவேற்புரையை எம்.எம்.நிஜாமுடீனும் தலைமையுரையை ஐ.எல்.ஏ.மஜீட் அவர்களும் நிகழ்த்தினர்.
நிலா இசைக்குழுவின் இனிமையான இசைமழையுடன் இடம்பெற்ற நிகழ்வு பிளைங்ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 37 ஆவது வருடாந்த நிகழ்வாகவும் பௌஸி விளையாட்டுக் கழகத்தின் 7 ஆவது வருடாந்த நிகழ்வாகவும் கான் விளையாட்டுக் கழகத்தின் 3 ஆவது வருடாந்த நிகழ்வாகவும் அமைந்திருந்தது.
நிகழ்வின்போது பிளைங்ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 2019/2020 ஆம் வருடத்துக்கான நிருவாகிகளாக:
தலைவர்: ஐ.எல்.ஏ.மஜீட்
ஆயுள்கால செயலாளர்: எஸ்.முகம்மட் கான்
பிரதித் தலைவர் ஏ.எஸ்.உமர் பாறூக்
பிரதி செயலாளர்: எம்.எம்.நிஜாமுடீன்
பொருளாளர்: எச்.ரீ.எம்.அஸ்லம்
கணக்குப் பரிசோதகர்:ஏ.எல்.றியாஸ்
முகாமையாளர்:ஏ.எம்.எம்.றியாஸ்
நிருவாகசபை உறுப்பினர்களாக: ஒ.எம்.பாயிஸ்,எம்.வை.முபாறக்,யூ.எல்.இல்லியாஸ் மற்றும் எம்.எல்.எம்.பஸ்மிர் ஆகியோர் தெரிவாகினர்.
பௌஸி விளையாட்டுக் கழகத்தின் நிருவாகிகளாக:
தலைவர்: எம்.ஏ.அஸ்வர்
செயலாளர்: எம்.எஸ்.றியாஸ்
உப தலைவர் எம்.எச்.ஆதம்
உப செயலாளர்: ஏ.எல்.எம்.றனீஸ்
பொருளாளர்: ஏ.சாஹுல் ஹமீட்
கணக்குப் பரிசோதகர்:ஆர்.எம்.முஹ்ஸீன்
முகாமையாளர்:ஏ.எம்.எம்.றியாஸ்
நிருவாகசபை உறுப்பினர்களாக: எம்.ஐ.எம்.றிக்காஸ், ஐ.எம்.இஸ்ரத்,எம்.ஏ.பாறூக்,ஏ.சி.பிர்தௌஸ் மற்றும் ஆஷிக் ஆகியோர் தெரிவாகினர்.
கான் விளையாட்டுக் கழகத்தின் நிருவாகிகளாக:
தலைவர்: கே.அமீர்
செயலாளர்: ஏ.எம்.நபீன்
உதவித் தலைவர் ஏ.ஜஹான்
உதவிச் செயலாளர்: யூ..எல்.றஹீம்
பொருளாளர்: ஏ.எம்.சஜான்
கணக்குப் பரிசோதகர்:ஏ.நௌபர்
முகாமையாளர்:எம்.எம்.எம்.அல் ஆஸாத்
நிருவாகசபை உறுப்பினர்களாக: எஸ்.கே.அன்வர்,ஏ.எல்.எம்.ஜெஸீம்,எஸ்.எச்.நிப்லி,ஏ.எல்.என்.அப்துல்லாஹ் மற்றும் சி.எம்.ஜுனைடீன் ஆகியோர் தெரிவாகினர்.
கழகத்தின் மூத்த உறுப்பினர்களான அல் ஹாஜ் ஐ.எல்.ஏ.மஜீட், எம்.எஸ் உமர் பாரூக் மற்றும் எஸ்.எம்.சுஜான் ஆகியோர் விஷேட கௌரவம் பெற்றதுடன் கழகத்துக்காக உழைத்த பலரும் கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேச ஊடகவியலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.