காரைதீவு சகா-
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழர் பிரதேசங்கள் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அப்பிரதேசங்களுக்கு கடந்த சில தினங்களாக விஜயம் செய்து பார்வையிட்டு மக்களின் நிலைமைகளை அறிந்து நடவடிக்கை எடுத்துவருவதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில்:

ஆலையடிவேம்புப் பிரதேசம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இரு முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நெக்கோட் கட்டடத்தில் இன்னும் வெள்ள அகதிகள் தங்கியுள்ளனர்.
அம்பாறை அரசஅதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க அனர்த்தமுகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோரோடு தொடர்புகொண்டு அவர்களுக்கான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
அது தவிர திருக்கோவில் முனையக்காடு காரைதீவு மணற்சேனை பொத்துவில் தாமரைக்குளம் போன்ற பிரதேசங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பிரதேசங்களிலுள்ள வீடு வாசல்களிலும் வெள்ளம் புகுந்துள்ளது. அவர்களில் பலர் பொதுஇடங்களுக்கு வருவதற்கு தயக்கம் காட்டி உற்றார் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
வீதிகளில் வெள்ளம் தேங்கிநிற்கிறது. அந்தந்த உள்ளுராட்சி சபைகளின் தலைவர்களுடனும் தொடர்புகொண்டு வெள்ளநீரை வெட்nவிடுவதற்கான ஏற்பாட்டைச்செய்துள்ளேன்.
இன்னும் மழை தொடருமானால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கியநிலை ஏற்படலாமென்றும் தெரிவித்தார்.