எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் தம்பலாகாமம் பிரதேசத்தில் "மரம் நடுவோம் சூழலை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் கிறின் லிட்டில் பவுண்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் நூறு குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் தென்னம் கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று(2) தம்பலாகாமம் கமநல சேவைகள் மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஏ.கே.வசீர் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது தம்பலாகாமம் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட நூறு கும்பங்களுக்கு முந்நூறு பேர் பயனடையும் வகையில் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் விவசாய வெளிக்கள உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் ,பிரதேச சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.

