இந்த பொறுப்பு உரிய முறையில் இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிவது சுற்றாடல் பொலிஸ் பிரிவின் பொறுப்பாகும். கழிவு பொருட்களை அகற்றுவது பொலிஸாரின் கடமை அல்ல.
இது தொடர்பில் பொலிஸார் செய்ய வேண்டியது என்னவெனில் கழிவு பொருட்கள் உரிய முறையில் அகற்றப்படுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தெரியப்படுத்துதல் மற்றும் அது தொடர்பாக இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆகும். கழிவு பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபடுமாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறப்படவில்லை என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜெனரல் அனுருத்த ரத்வத்தயில் எட்டாவது நினைவு தினத்தை முன்னிட்டு கண்டி மஹிஜாவில் அமைந்துள்ள அமரரின் வீட்டிற்கு அருகாமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டார். இதன் பின்னர் உடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
