டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசளிப்பு


எம்.என்.எம்.அப்ராஸ்-
நாடளாவிய ரீதியில் தற்போது பெய்துவரும் மழை வீழ்ச்சியினால் டெங்கு நோயின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது.டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக பலவிதமான செயற்பாடுகளை தேசிய டெங்கு தடுப்பு பிரிவு மேற்கொண்டுவருகின்றது.

இதற்கமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்
பணிமனையினால்
பாடசாலை மாணவர்களை மையமாக வைத்து விழிப்புணர்வு போட்டி நிகழ்ச்சிகள் இவ்வருடம் நடாத்தப்பட்டது.

நுளம்புகள் அற்ற சிறந்த மாதிரிப் பாடசாலைகளைத் தெரிவுசெய்தல், குறுங்காணொளி தயாரித்தல் மற்றும் கழிவுப் பொருட்களில் இருந்து புத்தாக்கங்களை உருவாக்குதல் ஆகிய போட்டிகள் இடம்பெற்றன .

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்
பணிமனையின் கீழ் உள்ள
ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் வெற்றியாளர்கள் தெரிவுசெய்யபட்டனர்.

பிராந்திய ரீதியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பணப்பரிசல்களும், சான்றிதழ்களும், மற்றும் போட்டியில் கலந்துகொண்ட சகலருக்கும் சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கும் நிகழ்வு
நேற்று(30) சனிக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில், பிராந்திய தொற்று நோய் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல் .அலாவுதீன் அவர்களும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ .சுகுணன்
அவர்களும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எல்.எம்.மிஹ்லார் அவர்களும், பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பணிமனையின் கணக்காளர், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பிராந்திய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் மாகாண மட்ட போட்டியில் பங்கு பற்றுவர். மாகாண ரீதியிலான வெற்றியாளர்கள் தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -