கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை இன்று (02) திகதி நாடெங்கும் உள்ள 4987 பரீட்சை நிலையங்களில் இன்று (02) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகின.
குறித்த பரீட்சை எதிர்வரும் 12 திகதி வரை நடைபெறும்.இப்பரீட்சைக்கு இம்முறை 4 இலட்சத்து 33 ஆயிரத்து 50 பாடசாலை பரீட்சாத்திகள் தோற்றவுள்ளர். தனியார் பரிட்சாத்திகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 83 ஆயிரத்து 958 ஆகும். மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 17 ஆயிரத்து எட்டு என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அருகில் உள்ள பரீட்சை மத்திய நிலையங்களுக்கு சென்ற பரீட்சை எழுத முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதே வேளை ஹட்டன் கல்வி வலயத்தில் இம் முறை பரீட்சைக்கு 4050 மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.இதில் 3300 தமிழ் மொழிமூல மாணவர்களும் 750 சிங்கள மொழிமூல மாணவர்களும் அடங்குகின்றனர்.
இம்மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு சுமார் 20 வது பரீட்சை மத்திய நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் ஹட்டன் ,மஸ்கெலியா,நோர்வூட்,லக்ஷபான,கடவல ஆகிய பிரதேசங்களில் ஐந்து ஒன்று திரட்டும் நிலையங்களும் ஏற்படுததப்பட்டுள்ளன.
பரீட்சாத்திகள் செல்லிடப்பேசி இலயத்திரணியல் உபகரணங்கள் எதுவும் கொண்டு செல்ல கூடாது எனவும், ஆள் அடையாளத்தினை உறுதிபடுத்தும் தேசிய அடையாள அட்டை எடுத்துச்செல்ல வேண்டும். எனவும், பரீட்சை நிலையத்திற்கு 7.30 மணிக்கு ஆஜர் ஆக வேண்டும். எனவும,; தெரிவிக்கப்பட்டுள்ளன.