அரசியல் கட்சித் தலைவர்களுக்கு 4 ஆம் திகதி வருமாறு அழைப்பு


மினுவாங்கொடை நிருபர்-
னைத்து அரசியல் கட்சிகளினது தலைவர்களையும், 4 ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்கு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகை தருமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்பாளர்களிடமிருந்து பெறப்படும் கட்டுப்பணம் தொடர்பான திருத்தங்கள் குறித்தும், இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்துக் கட்சிகளினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதே, இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கம் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -