இராணுவ நிர்வாக முறை ஒன்றை ஏற்படுத்தும் எந்தவித நோக்கமும் இதன் பின்னணியில் இல்லை. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் சட்டம் ஒழுங்கை பேண முப்படையினரை ஈடுபடுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி சங்கைக்குரிய வலவா ஹெங்குன வெவே தம்மரத்ன தேரரை நேற்று சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்ற வேளையிலேயே திரு.குணரட்ன இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
சில தரப்பினர் முன்வைத்த அச்சம் தொடர்பான அநாவசிய கருத்துரைகளை பொதுமக்கள் முற்றாக நிராகரித்து, சமகால நிலைமையை சரியாக புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து சமூகங்களும் மதக்குழுக்களும் பாதுகாப்பாகவும், கௌரவமாகவும் வாழக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்துவதாக அவர் உறுதியளித்தார். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனையை இல்லாதொழிப்பதற்கு அனைத்து மக்களிதும் ஒத்துழைப்பு அவசியம் என்று பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராயபக்ஷவின் ஆட்சியில் அனைத்து வகை ஊழல், அதிகார துஷ்பிரயோகம், பொது மக்களின் நிதியை தவறாக பயன்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் சமூகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கப்படும் என்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
நீதியும் நேர்மையுமான அரசாங்கமொன்று ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற தொனிப் பொருளில் உருவாக வழி வகுக்கும். பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின் நடத்தப்படும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 160 ஆசனங்கள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வர்த்தமானி அறிவித்தல் பொது மக்களின் பாதுகாப்பு தொடர்பாக வெளியிடப்பட்டதேயன்றி இராணுவ நிர்வாகத்தை மேற்கொள்ளும் வகையில் வெளியிடப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
