வரலாறு ஒன்றை, பத்திரம் ஒன்றின் ஊடாக இல்லாமலாக்க முனைவதை நாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.– ஹரிஸ் எம்.பி அறைகூவல்!

காலாகாலமாக முஸ்லிம்களின் தலைநகராக கல்முனை இருந்துவரும் நிலையில், அதனை சிதைத்து நியாயமற்ற முறையில் பத்திரம் ஒன்றின் ஊடாக இல்லாமலாக்க முனையும் செயற்பாடுகளை பார்த்துக்கொடிருக்க முடியாது என்றும் அதற்காக அனைவரும் கட்சி பிரதேசம் பாராது ஒன்றுபடுமாறு பாராளமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம் ஹரீஸ் அறைகூவல் விடுத்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவை ஆதரித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் சமகால அரசியல் சம்மந்தமான கலந்துரையாடலும் இன்று சனிக்கிழமை (30) சாய்ந்தமருது, மாளிகைக்காடு பிரதேசதில் அமைந்துள்ள “வாவா” தனியார் மண்டபம் ஒன்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட அமைப்பாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபையின் மேயர் எ.எம். றகீப், உப மேயர் காத்தமுத்து கணேஸ் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது உரையற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் கூறும் போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச சக்திகளின் தலையீடு இருந்தது என்ற விடயம் எல்லோருக்கும் தெரிந்தது, அதிலும் இந்தியாவின் தலையீடு அதிகமாக இருந்ததை இந்த இடத்தில் கூறியாக வேண்டும், குறிப்பாக இந்தியாவில் நடந்து முடிந்த தேர்தலில் நரேந்திர மோடியின் வெற்றிக்கான காரணம் இலங்கையில் ஸஹ்ரான் என்ற பைத்தியம் மேற்கொண்ட ஈஸ்டர் தாக்குதலையும், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களையே கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்திருந்தார், சஹ்ரன் குழுவினரின் அடுத்த இலக்கு தமிழ் நாடு என்றும் கருத்துக்களை முன்வைத்தனர்.
மோடி பிரதமரானதும் முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்தார், குறிப்பாக பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட வேண்டும் என்றும் அதே இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே போன்ற நிலை இலங்கையிலும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று கருத்து தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், காஸ்மீர் இன்று லடக் என்றும் ஜம்மு என்றும் பிரியப்பட்டுள்ளது இதைப் போன்றுதான் கோடீஸ்வரனும் , மாநகரசபை உறுப்பினர் ராஜன் போன்றோர் கல்முனையை கூறு போட துடிக்கின்றனர். இலங்கையின் நில அமைப்பில் கிழக்கு மாகாணத்தின் அமைப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இங்குள்ள முஸ்லிம் மக்களின் வர்தகம், கல்வி ,கலாச்சாரம் ,அரசியல் என்பவற்றின் இருப்பை கேள்விக்குறியாக்கி இல்லாமல் ஆக்குவதற்கு வல்லரசான இந்தியா முழுமையாக செயற்படுகின்றது. குறிப்பாக ஏழு,எட்டு வருடங்களுக்கு முன்னதாகவே இந்தியாவின் உளவுத்துறையினர் கிழக்கு இலங்கையில் கால்பதித்துவிட்டனர். வடக்கில் தமிழ் மக்கள் ராஜபக்‌ஷ குடும்பத்தை எதிர்த்து வாக்களித்திருந்தாலும் அவர்களை கட்டாயம் இந்தியா பாதுகாக்கும் .

அண்மையில் கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் அத்துரலிய ரத்ன தேரர் அவர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட உண்ணாவிரதமானது மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை போன்ற கலவரத்தை உருவாக்க முயன்றுள்ளார். இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முஸ்லிம்களின் இருப்பு சம்பந்தமான விடயம் இன்னும் கேள்விக்குறியாகாவே உள்ளது. முஸ்லிம் மக்கள் இன்று சிங்கள மக்கள் மத்தியில் எதிரிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ இன்று கடனாளியாக மாறி விட்டார் .
எனினும் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெற வைப்பதற்கு முஸ்லிம் மக்கள் ஒன்று பட்டதைப் போன்று இன்று முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க கட்டாயம் ஒன்றுபட வேடிய நிலை காணப்படுகின்றது. வடக்கில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தந்தை செல்வநாயகம் போன்றோர் தமிழ் மக்களை ஒன்று திரட்டியதை போல் முஸ்லிம் மக்களும் வருகின்ற பொது தேற்தலில் கட்சி பேதங்கள் மறந்து ஒன்று பட்டு தமது இருப்பை பாதுகாக்க வேண்டும் என தனது கருத்தில் தெரிவித்தார். 

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -