ஷஹ்ரான் குழுவால் படுகொலை செய்யப்பட்ட பொலிஸாரின் நினைவாக குருதிக்கொடை

பாறுக் ஷிஹான்-ஹ்ரான் குழுவினரால் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்களான அமரர் கணேஸ் தினேஸ், இந்திஹ பிரசன்ன ஆகியோரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (30) காலை 8 மணி முதல் காவேரி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் பெரியநீலாவணை இளைஞர்களால் இரத்ததான நிகழ்வு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்று வருகிறது.

கடந்த வருடம் 30 -11-2018 ஆம் ஆண்டு வவுணதீவு சோதனை சாவடியில் கடமையில் இருந்த வேளை ஷஹ்ரான் தலைமையிலான பயங்கரவாதிகளினால் கொடூரமாக முறையில் படுகொலை செய்யப்பட்ட இரு பொலிஸாரின் நினைவாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.
இரத்ததான முகாமிற்கு பல இளஞர்கள் ஆர்வத்துடன் முன்வந்து இரத்த தானம் செய்துவருகின்றமையை காண முடிந்தது .
கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கியின் வைத்தியர்குழாம் , தாதியர்கள் , ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -