கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் கொழும்பு வாழ் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்று கூடலை தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் நடாத்தியது. இதில் பிரதம பேச்சாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக இருந்த திரு. லலித் வீரதுங்க கலந்து கொண்டார்.
மேற்படி நிகழ்வில் உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத், புரவலர் ஹாஷிம் உமர், முன்னாள் கொழும்பு மேயர் உமர் காமில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குமார குருபரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.