திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் வாக்களிப்பு தற்போது சமூகமான முறையில் இன்று (16) இடம் பெற்று வருகிறது.
தற்போது இடம் பெற்று வரும் ஜனாதிபதி தேர்தலின் போதே மக்கள் ஆர்வத்துடனும் சுறு சுறுப்புடனும் வாக்களித்து வருகிறார்கள்.
இலங்கை நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலினை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
கிண்ணியா எகுத்தார் ஹாஜியார் வித்தியாலயத்தில் இன்றைய தினம் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களும் வாக்கினை அளித்து விட்டு வருவதனையும் காணக்கூடியதாக உள்ளது.