துப்பாக்கி பிரயோகம் செய்த எஸ்.பி திசாநாயகவின் பாதுகாவலர்களுக்கு விளக்கமறியல்...கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாாக்கி சூட்டு சம்பவத்தில் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திசாநாகவின் பாதுகாவளர்கள் இருவரை எதிர்வரும் 11 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் (07) உத்தவிட்டுள்ளார்
பொல்பிட்டிய பகுதியில் ( 06) மாலை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாயாயவின் தேர்தல் பிரசார கூட்டமொன்றுக்கு சென்றுதிரும்பிய பாராளுமன்ற உறுப்பினரின் தொடர்வாகனம் அப்பகுதியில் திருண நிகழ்வொன்றில் கலந்துகொண்டவர்களின் வாகனமொன்றில் மோதுண்ட நிலையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாவளர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகி ஒருவர் கித்துல்கல வைத்தியசாலையிலும் மற்றொறுவர் கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்
சம்வத்தையடுத்து துப்பாக்கி பிரயோகம் செய்த சந்தேக நபர்களான பாதுகாவளர்கள் இருவரை கைது செய்த கினிகத்தேனை பொலிஸார் 07 அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் ஜே.ட்ரொஸ்க்கி 11 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்