ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வை ஆதரித்து கொழும்பு மத்திய பகுதியில் தீவிர பிரசார நடவடிக்கைகளை, ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஆரம்பித்துள்ளார்.
இதற்கமைய, மத்திய கொழும்பை மையப்படுத்தி புறக்கோட்டை, மருதானை, மாளிகாவத்தை, தெமட்டகொடை, கிறேண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை உள்ளிட்ட மேலும் பின் தங்கிய பல பிரதேசங்களில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அவர் முன்னெடுத்துள்ளார்.
ஸ்ரீல.சு.க. யின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், முன்னாள் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி, கொழும்பின் பல்வேறு பகுதிகளிலும் ஒன்றுகூடல்களையும் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டுள்ளார்.
இதுவரை, புறக்கோட்டை, மருதானை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பல இடங்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இக்கலந்துரையாடல்களில், கொழும்பு மாநகர சபை ஸ்ரீல.சு.க. உறுப்பினர்களான துஷார ஹேமந்த (மஞ்சு), எம்.எச். மன்ஸில், சமன் அபேகுணரத்ன, அநுர வீரவர்தன, ருசிறிபால தென்னகோன், தீபா எதிரிசிங்க, கீதா மத்துமகே உள்ளிட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.