ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வாக்கெடுப்பு மற்றும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகளுக்காக, எதிர்வரும் 15 ஆம் வெள்ளிக்கிழமையன்று, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
16 ஆம் திகதி வாக்கெடுப்புக்கள் நடைபெறுவதுடன், 17 ஆம் திகதி வாக்கெண்ணும் நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன.
வாக்களிப்பு நிலையங்கள், வாக்கெண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள், எதிர்வரும் 14 ஆம் திகதியன்று பாடசாலை நேரத்தின் பின்னர் கிராம உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
இதேவேளை, வாக்குகளை எண்ணும் நிலையங்களாக 23 பாடசாலைகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
வாக்கெண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் பின் வருமாறு :
கொழும்பு : ரோயல் கல்லூரி | டி.எஸ். கல்லூரி
கம்பஹா: வித்யாலோக்க வித்தியாலம், வியாங்கொடை
களுத்துறை: களுத்துறை வடக்கு மியூசியஸ் கல்லூரி
கண்டி: பொல்கொல்ல மாதிரிப் பாடசாலை
மாத்தளை: கிறிஸ்துதேவ கல்லூரி
நுவரெலியா: காமினி தேசியப் பாடசாலை
காலி: புனித அலோசியஸ் கல்லூரி
மாத்தறை: சுஜாதா கல்லூரி
ஹம்பாந்தோட்டை: சுச்சீ தேசியப் பாடசாலை
யாழ்ப்பாணம்: யாழ். மத்திய கல்லூரி
மட்டக்களப்பு: இந்துக் கல்லூரி
குருணாகல்: மலியதேவ ஆண்கள் பாடசாலை,
சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரி
புத்தளம்: புனித அண்ரூ மத்திய மகா வித்தியாலயம், பாத்திமா பாலிகா கல்லூரி, செயினப் ஆரம்பப் பாடசாலை
அநுராதபுரம்: மத்திய கல்லூரி
பதுளை: மத்திய மகா வித்தியாலயம், விசாகா மகளிர் கல்லூரி
மொனராகலை: ரோயல் கல்லூரி
கேகாலை: மகளிர் கல்லூரி, ஸ்வர்ண ஜயந்தி மகா வித்தியாலயம்.