இதன் போது CWF Qatar அமைப்பு மேற்கொண்டு வரும் செயற்திட்டங்கள் குறித்தும் எதிர் வரும் காலங்களில் மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்திட்டங்கள் குறித்தும் CWF Qatar அமைப்பின் தலைவர் முஹமட் அக்ரம் இலங்கை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.
அதனையடுத்து அண்மைக் காலங்களாக கத்தாரில் இடம்பெற்று வரும் இலங்கையர்களது திடீர்
மரணங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன் அவ்வாறு திடீர் மரணங்கள் நிகழுமிடத்து CWF Qatar அமைப்பு எவ்வாறு இதனை கையாளுகின்றது என்பது குறித்தும் CWF Qatar அமைப்பின் தலைவர் இலங்கை தூதுவருக்கு தெளிவுபடுத்தினார்.
இதன் போது கருத்து தெரிவித்த இலங்கை தூதுவர் கித்சிரி அதுலத்முதலி.....
இவ்வாறான திடீர் மரணங்களுக்கான காரணம் கண்டறியப்பட வேண்டும் என்றும் இதற்கு CWF Qatar அமைப்பின் உதவி மிகவும் அவசியம் என்றும் வழியுருத்தினார். மேலும் இவ்வாறான நிலைமை குறித்து கூடிய கவனம் செலுத்துவதாகவும் இவ்வாறான நிலைமைகளை கண்டறிவதற்கு மருத்துவ முகாம்கள் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் CWF Qatar அமைப்பு மேற்கொள்ளும் சகல முயற்சிகளுக்கும் நானும் எனது தூதரக அதிகாரிகளும் துணை நிற்போம் என கத்தாருக்கான இலங்கை தூதுவர் கித்சிரி அதுலத்முதலி தெரிவித்தார்.
கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்-