சமூகத்தின் நலனை கருத்திற்கொள்ளாது ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் அடகு வைக்க சில முஸ்லிம் ஏஜண்டுகள் இயங்குவதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாடு நேற்றிரவு(24) கிண்ணியா நகர சபை மைதானத்தில் நடைபெற்ற போதே அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
இன்று பேரினவாதிகள் முஸ்லிம் மக்களை எப்படியாவது குறைக்க வேண்டும் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை இல்லாமலாக்கவே முனைகின்றார்கள்.
மக்கள் சிந்திக்கும் தருணம் வந்துள்ளது சஜித் பிரேமதாஸவிற்கு நாம் வாக்களித்தால் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து நிற்கும்,இல்லையேல் கோட்டா தான் என்றால் சமூகம் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.
இந்த இளைஞர் மாநாட்டில் அனைவரும் சஜித்தின் நிழல்களாக இருந்து கொண்டே உங்களுக்கு தெரிவிக்கின்றனர்.சஜித்திற்கு வாக்களியுங்கள் இந்த வாக்குகள் ஒட்டுமொத்தமாக அமையும் பட்சத்தில் சஜித்தின் வெற்றியை நாம் கொண்டாடலாம் என்றார்.
நாட்டில் மீண்டும் ஒரு கொலை கலாச்சாரத்தை ஏற்படுத்த நாம் துணை நிற்க கூடாது ஈஸ்டர் தாக்குதலில் எவ்வாறு முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றினைந்தார்களோ அதேபோன்று இந்த ஜனாதிபதி தேரிவிலும் ஒற்றுமையாக ஒற்றினைந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சர் றிசாத் பதியுத்தின்,இராஜங்க அமைச்சர் அமீர்அலி,முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.