கிண்ணியாவில் 230 மில்லியன் ரூபா செலவில் பல்கலைக்கழக கல்லூரிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிண்ணியா உப்பாறு பகுதியில் புதிய பல்கலைக்கழக கல்லூரிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது நேற்று (24) மாலை துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தலைமையில் இடம் பெற்ற இவ் நிகழ்வில் வர்த்தக வாணிப கைத்தொழில் ,நீண்ட காலம் இடம் பெயர்ந்தோரை மீளக்குடியேற்றல்,கூட்டுறவு திறன் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் அடிக்கல் நடும் நிகழ்வு இடம் பெற்றது
சுமார் 230 மில்லியன் ரூபா செலவில் நிருமாணிக்கப்படவுள்ள இப் பல்கலைக்கழக கல்லூரி பிரதியமைச்சரின் நீண்ட கால முயற்சியின் பலனாக தற்போது இது நிறைவேறியுள்ளது. இதனால் திருகோணமலை மாவட்ட இளைஞர் யுவதிகள் மட்டுமல்லாது ஏனைய பிரதேச யுவதிகளும் பல்வேறு அரச அங்கீகாரம் பெற்ற பாடநெறிகளை பயில்வதன் ஊடாக சிறந்ததொரு தொழில்வாண்மை கல்வி சமூகத்தை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக் குறித்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட இளைஞர் அமைப்பாளர் டாக்டர் ஹில்மி முகைதீன் பாவா,அமைச்சின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -