எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் கீழுள்ள சவளக்கடை உப அஞ்சல் அலுவலகம் அடிப்படை வசதியற்ற நிலையில் அதன் கூரை சேதடைந்து விழும் அபாய நிலையில் காணப்படுவதாக பிரதேச பொது அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் பௌதீக வளகுறைபாடுகளுடன், யன்னல்கள் சேதடைந்து சுற்றுமதில் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கிவருகின்றது.
தபால் துறை அமைச்சர் மற்றும் தபால் மா அதிபர், பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆகியோர்கள் இவ்விடயத்தில் துரித கவனம் செலுத்தி பிரதேச மக்களின் இன்னலை போக்க கூரையை புனரமைத்து அடிப்படை வசதிகளை நிபர்த்தி செய்து தருமாறு பிரதேச அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.