கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மட்டில் அக்கரைப்பற்றில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் பீச் ஹவுஸ் /கிழக்கு வாசல் வீட்டின் முன்பாக காலை சுமார் 7,30 மணி இருக்கும் தற்செயலாக அதாவுல்லாவை நேரடியாக காண்கின்றேன். யாருமே இல்லை அவர் தனியாக. படை பட்டாளம் இல்லை .சிரித்த முகத்தோடு என்ன இந்தப்பக்கம் என்றார்.சும்மா பீச் பக்கம் வந்தேன் என்றேன்.
நான் அப்போது சுடர் ஒளி தேசிய நாளிதழில் சண்டே வெளியீட்டில் சம கால அரசியல் பற்றி குறிப்பாக ஹக்கீம் கட்சியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய காலம்.
அந்த வகையில் “அக்கரைப்பற்றுக்குள் அடங்கி விட்ட அதாவுல்லாஹ் காங்கிரஸ்” என்று 10-02-2013 ல் அதாவுல்லாவின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றி இந்த உதுமாலெப்பையின் ஆட்டங்களையும் அவர் விட்டு வரும் தவறுகளையும் குறிப்பிட்டு எழுதி இருந்தேன் .
அதன் பின்பு சுமார் ஒரு வருடம் கடந்து 2014 ல் சந்திக்கும் வாய்ப்பு, இருவரும் அவரின் கிழக்கு வாசலுக்குள் சென்று வெளியில அமர்ந்து கொண்டோம்.உண்மையில் கிழக்கு வாசல் என்னும் அவரின் பீச் ஹௌஸ் கேரள வீட்டு அமைப்பில் இணல் சோலையாக அழகாக இருந்தது அங்கு எனது முதல் நுழைவு .அதன் பின்பு அவரின் எடுபிடிகள் அல்லக்கைகள் என்று 8 பேர் கூடி விட்டார்கள்.
என்ன சுடர் ஒளியில் உங்களை பற்றி எழுதியது கோபமா என்றேன் .மனிசண்ட முகம் மாறிப் போச்சே .நான் உடன் அடுத்த விடயத்திற்கு மாறினேன் .
எங்கள் அருகில் அமர்ந்து விட்டார்கள்.பிளைன் TTea அதை பெருகிக்கொண்டே சேர் நீங்கள் போட்ட பிச்சை உதுமானுக்கு அமைச்சுப்பதவி. அவர் தன்னை வளர்த்துக் கொண்டு உங்களை விட்டு பறப்பார்,/ பிரிவார் . உங்கள் கட்சி தொண்டர்களை நீங்கள் நேரடியாக சந்திக்கும் பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவர் மூலமாக தொண்டர்களை நெருங்குவது ஆபத்தானது . நீங்கள் சகல தொண்டனையும் உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது என்றேன்.அவர் சிரித்துக் கொண்டு உதுமாலெப்பையையும் உங்களையும் சேர்த்து வைக்க வைக்க வேண்டும் என்றார்.
ஆகா நான் ஏதோ உதுமாலெப்பை மீது பொறாமைபட்டு சொல்கின்றேன் என்று அதாவுல்லாஹ் நினைத்துக்கொண்டு இப்படி சொல்கின்றார் என்று நினைத்துக்கொண்டு நான் சொன்னேன் எனக்கும் அவருக்கும் எவ்விதமான சண்டை கோப தாபம் இல்லை நான் அவரோடு பேசுவதுண்டு என்று சொல்லிவிட்டு பட்டுத் தேறினால்தான் புரியும் என்று அப்போது நான் நினைத்துக்கொண்டு கிளம்பி விட்டேன். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அதாவுல்லாஹ்வை இன்னும் சந்திக்கவில்லை.
பின்னர் சில மாதங்கள் கடந்த நிலையில் அப்போது அமைச்சர் உதுமாலெப்பையைக் கண்டு மகனே உன்னைப் பற்றி உனது தலைவர் அதாவுல்லாஹ்விடம் நீ கட்சியி விட்டு விலகுவாய் என்று சொன்னேன் ஆனால் அவர் உன்னையும் என்னையும் சேர்த்து வைக்க வேண்டும் என்று சொன்னார் .
இப்போது என்ன நடந்திருக்கின்றது ,,
இதைத்தானே நான் சொன்னேன் உதுமாலெப்பை தன்னை வளர்த்துக் கொண்டு உங்களை விட்டு பறப்பார்,/ பிரிவார்!.இதுதானே நடந்துள்ளது.
உதுமாலெப்பையுடன் இருந்த அதாவுல்லாஹ் கட்சிக் காரர்கள் பலர் உதுமாலெப்பையுடன் சென்று விட்டர்கள். இப்போது அட்டாளைச்சேனை> பாலமுனை > ஒலுவில் பகுதிகளில் நாலு சில்லரைப் பசங்களை அதாவுல்லாஹ் என்ன செய்யப் போகின்றார் .
அதாவுல்லாஹ் உதுமாலெப்பையை வைத்துக்கொண்டு வெற்றி பெற முடியவில்லை இனி எப்படி வெற்றி பெறுவது ?
பார்ப்போம் ..