சஜித் நுவரெலியாவில் அமோக வேற்றியை பெறுவர், அமைச்சர் திகா


இ.தொ.கா முன்வைத்த கோரிக்கைகளில் ஐ.தே.மு நிராகரித்த கோரிக்கைளை தாருங்கள் நாங்கள் நிறைவேற்றுகின்றோம் திலகர் எம்.பி
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
நுவரெலியா மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ அதிகூடிய வாக்குகளை பெறுவார் அமைச்சர் திகாம்பரம் தெரிவிப்பு....
ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதி கூடிய வாக்குகளை பெற்று சஜித் பிரேமதாஸ அமோக வெற்றிபெருவார் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சருமாகிய பழநி திகாம்பரம் தெரிவித்தார்
தேர்தல் பிரசார நடவடிக்கைகளை 14/10 ஆரம்பித்து வைத்தப்பின் அட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.திலகராஜ் கலந்துகொண்டார்
இதன்போது அமைச்சர் பழநி திகாம்பரம் தொடர்ந்து பேசியதாவது மலையக மக்கள் அன்னம் சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸ விற்கு வாக்களிக்க வேண்டுமென்று தீர்மாணித்து விட்டார்கள் அந்த மக்களின் ஆனைக்கு அமைவாக தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்க தீர்மாணித்தது
கடந்த பொதுத்தேர்தலில் 75 ஆயிரத்திற்கும் அதிக வாக்குகளை பெறுவோம் எனறேன் அதே போல 1 லட்சத்து ஐந்தாயிரம் வாக்குகளை பெற்றோம்
அப்போது மாகாணசபையிலிருந்தே இவ்வளவு வாக்குகளை பெற்றோமேயானால் இந்த ஐந்தாண்டு காலத்தால் மலையகத்தில் அபிவிருத்தி புரட்சியை இந்த அரசினூடாக செய்துள்ளோம் ஆகவே நுவரெலியா மாவடத்தால் எந்த வித போட்டியுமின்றி அதிகூடிய வாக்குககளை சஜித் பிரேமதாஸவிற்கு பெற்றுக்கொடுப்போம் என்றார்
மேலும் நுவரெலிய மாவட்ட மக்கள் சஜீத்தை எதிர்பார்க்கையில் டிப்பொன்டர் வாகனத்திற்காக மாற்று அணியினருக்கு சிலர் ஆதரவு வழங்குகின்றனர் அவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தை கற்பிப்பார்கள் என்றார்
இதன் போது பாராளுமன்ற திலகராஜ் கருத்து தெரிவிக்கையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 32 அம்ச கோரிகைகளை ஐக்கிய தேசிய முன்னணியிடன் முன்வைத்து அதனை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் மாற்று அணியினருக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து வருகின்றனர்
அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் பலவற்றை நாங்கள் ஏற்கனவே நிறைவேற்றி விட்டோம்
நாங்கள் அவர்களிடம் ஒருவிடயத்தை முன்வைக்க விரும்புகிறோம் ஐக்கிய தேசிய முன்னணியிடம் நீங்கள் முன்வைத்த 32. அம்ச கோரிக்கைகளில் அவர்கள் ஏற்க மருத்த கோரிக்கைகள் என்ன ? அந்த கோரிக்கைகளை எம்மிடம் தாருங்கள் நாங்கள் அவற்றை நிறைவேற்றிக்காட்டுகிறோம்

"என்றும் நாங்கள் உங்களுடன்" என பதிவை இடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்படி ஏனைய வேட்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது என்று கூற முடியும் ? யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தாமல் நின்ற இடத்திலே நின்று கொண்டு அங்கும் இங்கும் பேச்சுவார்த்தை நடத்தியது போல காட்டிவிட்டு இருந்த இடத்திற்கே தமது ஆதரவை தெரிவிப்பதாக கூறுகின்றனர்
தமிழ் முற்போக்கு கூட்டணி 10 அம்ச கோரிக்கைகளை தற்போது தயாரித்து வருகின்றது அந்த கோரிக்கைகள் மலையக மக்களுக்கானது மற்றுமன்றி தேசிய ரீதியிலான விடயங்களை உள்ளடக்கியதான கோரிக்கைகள முன்வைத்தே ஐனநாயக தேசிய முன்ணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதவை வழங்குகின்றோம் என்றார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -