மக்கள் காங்கிரஸ் மூன்று ஜனாதிபதிகளை உருவாக்கிய கட்சியாகும். சஜீத்தின் வெற்றி உறுதி! - அமைச்சர் றிஷாட்


ஷய்பான் அப்துல்லாஹ்,ஸிபான்-
T.B. ஜாயா முதல் மாமனிதர் அஷ்ரஃப் வரையுள்ள முஸ்லிம் தலைமைகள் யாரும் தமிழ்த் தலைமைகளைப் போல் முஸ்லிம்களுக்காக தனிநாடு கோரவில்லை. அவர்கள் எம்சமூகத்தை நிம்மதியாக வாழ வைத்தார்கள் என மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (20) நிந்தவூர் பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் றிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முஸ்லிம்கள் இந்நாட்டில் மூவின மக்களுடனும் ஒன்றிணைந்து நிம்மதியாக நாட்டுப் பற்றுடன் வாழவே அன்றைய முஸ்லிம் தலைமைகள் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இன்று ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னர் முஸ்லிம்களின் நிம்மதி, பாதுகாப்பு என்பன கேள்விக் குறியாக மாறியுள்ள நிலையில், இதனை நாம் மீண்டும் முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜீத்திடம் பேச்சு நடாத்தி உறுதிப்படுத்திய பின்னரே மக்கள் காங்கிரஸ் அவரை ஆதரிக்க தீர்மானித்தது.
யாரும் நாட்டின் சட்டத்தை கையிலெடுக்க முடியாது. சகல இனங்களும் அவரவர் மத சுதந்திரத்துடன் வாழ வழியேற்படுத்திக் கொடுக்கப்படும் என்ற சஜீத்தின் பேச்சுக்கள் எமக்கான உத்தரவாதமாகும்.
மக்கள் காங்கிரஸ் தனது குறுகிய கால வளர்ச்சியில் 2005 முதல் 2015 வரையான மூன்று ஜனாதிபதித் தேர்தல்களில் மூன்று ஜனாதிபதிகளை உருவாக்கிய கட்சியாகும். இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் எமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளர் சஜீத் வெற்றி பெறுவார் என்பதில் நாம் திடமாகவுள்ளோம் எனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1978ம் ஆண்டு அரசியல் அமைப்பில் உள்ள விடையங்களை, சகல இனங்களுக்கும் அரசியல் அமைப்பில் உள்ளபடியே அமுல்படுத்த கோரியுள்ளமை மற்றும் சகல இனங்களுக்குமான சுதந்திரத்தை நாட்டிலே அமுல்படுத்த சட்டவாட்சியை நிறுவி, சட்டத்தை கையில் எடுப்பவர்களை தண்டிக்கும் வல்லமை கொண்ட இரும்பு மனிதன் சஜித் பிரேமதாஸ என்று அவர் குறிப்பிட்டார்.
தனது கொழும்பு வீட்டிலே சஜித் பிரேமதாஸவை அழைத்து பேசிய போது கேள்வி பதில் நிகழ்வில் கலந்து கொண்ட அவர்; முஸ்லிங்கள் இந்த நாட்டிலே எதிர்கொள்ளும் பிரட்சினைக்களுக்கு உரிய தீர்வினை எட்டித் தருவதாகவும் முஸ்லிங்களின் பிரதேச செயலக எல்லைப்பிரட்சனைகளை அவர் துல்லியமாக அடையாளங்கண்டு அதற்கான தீர்வுகளையும் முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை திருநாட்டிலே சக இனங்களும் சகல செளபாக்கியங்களும் பெற்று வாழக்கூடிய தீர்வினை தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலே உள்ளடக்கி வெளியிட சஜித் பிரேமதாஸ தீர்மானித்துள்ளதாகவும்;
அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாஸ இந்த நாட்டிலே முஸ்லிங்களுடன் அண்டிப்பழகிய ஒருவர் என்றும் சஜித்திடம் சிறந்த பெளத்தனுக்கு உரிய அடையாளங்கள் காணப்படுவதனாலும், இந்த நாட்டில் உள்ள எமது எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டும் அவரை ஆதரிக்க முன்வந்ததாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
மேலும், இம்முறை தேர்தலில் அனைத்து இன மக்களினையும் ஆதரித்து செல்லக்கூடிய சஜித் பிரேமதாஸவினை முஸ்லிங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பிரதான கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிறஸ் ஒன்றிணைந்து ஆதரிப்பதனால் அனைத்து மக்களும் ஒன்றித்து வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்க முன்வர வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -