பழுலுல்லாஹ் பர்ஹான்-
1991 கல்விப் பொதுத் தராதர சாதாரணதப் பரீட்சை,1994 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட (PEARL 94) பேல்94 அமைப்பினால் பாடசாலை காலத்தில் தங்களுக்கு உயர்தரம் கற்பித்த ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் காத்தான்குடி மெரீனா பீச் பெலஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
பேல் 94 அமைப்பின் உறுப்பினரும்,காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் உப அதிபருமான எம்.ஏ. நிஹால் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பேல்94 அமைப்பின் உறுப்பினர்களுக்கு உயர்தரம் கற்பித்த ஆசிரியர்களான எம்.எச்.ஏ.றஸூல்,எம்.எம்.எம்.மஃறூப்கரீம்,எம்.சீ.எம்.ஏ.சத்தார்,எம்.ஏ.எம்.அலாவுதீன்,எம்.எம்.முஸ்தபா, வை.பீ.அப்துல் கபூர்,எம்.எம்.எம்.நவ்பர்,பீ.எம்.எம்.அமீன், ஏ.எம்.எம்.ஹிதாயதுல்லாஹ்,எம்.எம்.கலாவுதீன்,ஏ.எல்.ஏ.எம்.அப்துல் காதர்,ஏ.எல்.அப்துல் கையூம்,எம்.எச்.எம்.இக்பால் (பலாஹி),எஸ்.எம்.வை.கே.நஸீம்,எஸ்.அப்துல் அஸீஸ் ஆகிய பதினைந்து ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தப்பட்டு விருதும்,பரிசும்,அன்பளிப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த பேல்94 அமைப்பில் வைத்தியர்,சட்டத்தரணிகள்,பொறியியலாளர்கள்,தொழிலதிபர்கள்,வங்கி முகாமையாளர்கள்,அரச நிறுவனங்களின் உயரதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,ஊடகவியலாளர்,அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.