காரை நகா் பிறப்பிடமாகக் கொண்ட காரைக் கவி, கல்வியமைச்சில் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலைகள் வேளைத்திட்டத்தின் பணிப்பாளராக கடமையாற்றும் எஸ் பத்மநாதன் எழுதிய 10 தமிழ் நுால்கள்வெளியீட்டு வைபவம் நேற்று 13 அக்டோபா் 2019 பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம் கலந்து கொண்டாா். நுால் வெளியீடு வைபவம் முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபா் கே அரசரத்தினம் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரையை இந்துக் கல்லுாாி அதிபா் ப.பரமேஸ்வரன் . ஆசியுரை கு.வை.க வைத்தீஸ்வரக் குருக்கள், நிகழ்த்தினாா்ா. பாராளுமன்ற உறுப்பிணா் மல்லியப்பு திலகா், திறந்த பல்கலைக்கழக பேராசிரியா் சிவலோகநாதன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபா் சந்திர லடீசன், ஆகியோறும் 10 நுால்கள் பற்றி ஆய்வுரைகளை நிகழ்த்தினாா்கள்.
இந் நிகழ்வில் நுாலாசிரியா் அவரது திறமைகள் சேவைகள் பற்றியும் கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம், இராஜாங்க அமைச்சா் வே. இராதக்கிருஸ்னன், பாராளுமனற் உறுப்பிணா் சிறிதரன், ஆகியோா்கள் நிகழ்த்தினாா்கள். அன்மையில் வத்தளையில் வாழ் தமிழ் மாணவா்களுக்காக 15 கோடி ருபா பெறுமதியான தனது சொத்தை வழங்கி தமிழ் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உதவிய கொடைவள்ளல் மாணிக்கவாசகம் அதிதியால் கௌரவிக்ப்பட்டாா். அத்துடன ்அவரே நுால்களின் முதற்பிரதியையும் அமைச்சாிடமிருந்து பெற்றுக் கொண்டாா்.
இங்கு உரையாற்றிய கல்வியமைச்சா் அகில விராஜ்
காரை நகா் கரைக்கவி புனைப்பெயா் கொண்ட கே. பத்மநாதன் கடந்த 5 வருடங்களாக கல்வியமை்சின் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலைத் திட்டத்தினை வட கிழக்கு மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் சென்று அத்திட்டத்தினை திறம்பட நடாத்திவருகின்றாா். அவா் ஒரு சிறந்த நிர்வாகி, 13 பட்டங்களைப் பெற்றுள்ளாா். விஞ்ஞானப் பட்டதாரி லண்டனில் முதுமாணிப்பட்டத்தினைப் பெற்றவா். பத்மாநாதன் தமது வேலைப்பழுக்கள் மத்தியில் ஒரே நேரத்தில் 10 நுால்களையும் எழுதியுள்ளாா். அவா் பிரயாணம் மேற் கொள்ளும்போதே தமது மடி கணனியுடன் இருந்து கொண்டு இந் நுால்களை எழுதியதாக தெரிவிததா்.
எனது அமைச்சின் கீழ உள்ள நுாலக ஆய்வு மற்றும் காப்பகம் நிலையத்தின் ஊடாக இந்த நாட்டில் தமிழ் எழுத்தாளா்களது நுால்களை கொள்முதல் செய்து அவற்றினை சிங்கள மொழி மூலமும் சிங்கள மொழி மூலமான நுால்களை தமிழ் மொழியிலும் மொழிபெயா்த்து வெளியிடும் படியும் நுாலகங்களில் வைக்கும் படியும் எனது அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அதற்கான நிதியை ஓதுக்கியுள்ளதாகவும் கல்வியமைச்சா் அங்கு உரையாற்றினாா்.