பெரும்பான்மை மக்களின் பெரும்பாலானவர்களின் முடிவை ஆதரிப்பதன் மூலம் இந் நாட்டின் மீதான தேச பக்தியை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இத் தேர்தலைப் பயன்படுத்துவோம்!



இன்றேல் கடந்த காலங்களைப் போன்று தமது தனிப்பட்ட நலன் களுக்காக எமது அரசியல் தலைவர்கள் உருவாக்கும் படு குழியில் விழுந்து சமூகமும் ,அதன் பொருளாதாரமுமே பாதிக்கப்படும் என்பதே எமது கடந்த காலப்படிப்பினை.
========================

லங்கையில் 2019 க்கான ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி சிறுபான்மை இனம் ,குறிப்பாக முஸ்லிம்கள் இத் தேர்தலில் என்ன செய்யலாம் என்பது பற்றி இப்பதிவு ஆராய்கின்றது,

#அறிமுகம்.
ஜனாதிபதி பதவி என்பது நாட்டில் மிக முக்கியமான பதவி மட்டுமல்ல, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினைத் தரும் ஒருவரைத் தெரிவு செய்வதுடன் அவரது நடத்தையே எமது சமூகங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்றாகவும் அமைவதற்கான வாய்ப்பையும் வழங்குகின்றது.அதனால் இப்பதவி மிக முக்கியமானது,

#கடந்தகாலப்_படிப்பினைகள்

கடந்தகாலங்களில் பல ஜனாதிபதிகள் பதவிக்கு வந்திருந்தாலும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது போன
தேசியப் பிரச்சினைகள் பல உள்ளன,சமத்துவம் வறுமை குறைப்பு, அபிவிருத்தி,தேச ஒருமைப்பாடு, சர்வதேச புகழ், கல்வி மேம்பாடு என பல பிரச்சினைகள் உள்ளன, ஆனாலும் அவர்களது பதவிக்காலம் முடியும் வரை அவர்கள் ஆட்சியில் இருந்து விட்டே சென்றுள்ளனர்
அதே போல சமூகத்தின் நலனைக்கருத்திற் கொள்ளாது எமது அரசியல் தலைவர்கள் எடுத்த பிழையான தீர்மானங்களால் முஸ்லிம் சமூகம் பல பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளோம், இன்றும் எதிர் கொள்கின்றோம், ஆனால் தமது பிழையான தீர்மானங்களால் ஒரு அப்பாவிச் சமூகம் பாதிக்கப்பட்டதை அவர்கள் எங்கும் ஏற்றுக் கொண்டதாக இல்லை.

#முஸ்லிம்களின்_நிலைப்பாடு

முஸ்லிம்கள் இந் நாட்டில் பற்றுள்ள ஒரு சமூகம் இத் தேசத்திற்கு பல வழிகளில் பங்களிப்பு நல்கியதுடன் ,அவர்கள் பிரிவினையையோ, தூண்டாடல்களையோ விரும்பவில்லை, மட்டுமல்ல இத்தேசத்தை விட்டு வெறுத்தோடியதும் குறைவு, அந்த வகையில் தமது பொருளாதார, சமய, கலாசார அனுஷ்டானங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாத்துடன் வாழ்வதையே அவர்கள் விரும்புகின்றனர் அத்தோடு இன உறவில் சிங்கள, தமிழ் மக்களுடன் முரண்படாமல் வாழவுமே விரும்புகின்றனர்

#எமது_தெரிவு_எவ்வாறு ???

இந்த நாடு பௌத்த சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு அத்துடன், இந்நாட்டின் எல்லாப்பகுதியிலும் முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களையும் ,பொருளாதாரத்தையும் கொண்டு இணைந்து பரந்து வாழும் சமூகமாகவும் உள்ளனர் ,

அந்தவகையில் "பெரும்பான்மை மக்களில் பெரும்பாலானோர் விரும்பும் "ஒரு தலைவருடன் உடன்படிக்கை செய்து அதன்மூலம் எமது வாழ்வியல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே சிறப்பானது மட்டுமல்ல அதுவே சிறந்த சமயோசிதமான முடிவுமாவும் அமையும் ,, மாறாக சிறுபான்மை மக்களில் பெரும்பாலானவர்களினால் தெரிவு செய்யப்படும் தலைவர் சிறுபான்மை பிரச்சினைகளைத் தீர்க்க பல சிக்கல்களை பெரும்பான்மை சிங்கள மக்களிடம் இருந்து எதிர் கொள்ள வேண்டி வரும், அதற்கு மைத்திரிபால அரசு சிறந்த உதாரணம்
அத்துடன். தெரிவு செய்யப்படும் தலைவர் அரசியல் ஆளுமையில்
பலவீனமான ஜனாதிபதியாக இருப்பின் அவரை ஆதரவு வழங்கும் இனவாதிகள் தமது தேவைக்கேற்ப எமக்கு எதிராக பயன்படுத்தவும் முடியும்

#இந்த_முறை_விஷேட_காரணம்

இதுவரை இந் நாட்டில் சிறப்பாக வாழ்ந்த முஸ்லிம்கள் இம்முறை #பயங்கரவாதிகள் என்ற பட்டத்தையும் சுமந்துள்ளனர், இது இலங்கை முஸ்லிம் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய ஒரு நிகழ்வாகும்,
ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் ரணில் அரசு சரியான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்குமானால் , இந்த அவப்பெயர் முஸ்லிம்களுக்கு வந்திருப்பதைத் தவிர்த்திருக்க முடியும்.
ஆனாலும் முஸ்லிம் "#பொதுச்_சமூகம் " அரசியல்வாதிகளுக்கு அப்பால் நின்று மிகவும் புத்திசாதூரியமாக தேச பக்தியை வெளிப்படுத்தி செயற்பட்டதனால் தேவையற்ற இழப்புக்களில் இருந்து ஓரளவு தப்பித்து விட்டது,, அந்த முறையியலையே இந்த தேர்தலிலும் பயன்படுத்த வேண்டி உள்ளது.

#தேசபக்தி_அரசியல்

அந்த வகையில் முஸ்லிம் சமூகம் இந்த தேர்தலிலும் தேசத்திற்கும் ,தேசபக்திக்கும் முன்னுரிமை வழங்கி, சிங்கள பெரும்பான்மை மக்களின் பொது விருப்பத்தை கவனத்திற்கொண்டு அதனோடு இணைந்து வாக்களிப்பதன் மூலம், எமது அரசியல் தலைவர்கள் 2005, 2010 ,போன்ற தேர்தல் களில் எதிர்ப்பு அரசியலில் நின்று வீணாக சமூகத்தை பலியாக்கி விட்டு மீண்டும் அவர்கள் அமைச்சர்களாகி அனுபவித்ததையும் அதனால் கூர்ப்டைந்த இனவாதிகளின் தாக்குதலுக்கு அப்பாவி சமூகம் அடிக்கடி பாதிக்கப்பட்ட வேளை அரசியல்வாதிகள் எம்மை அனாதைகளாக்கி விட்டு வாய் மூடி இருந்ததையும்,இம்முறையாவது தவிர்க்க முடியும்,

இன்றேல் கடந்த காலங்களைப் போன்று தமது தனிப்பட்ட நலன் களுக்காக எமது அரசியல் தலைவர்கள் உருவாக்கும் படு குழியில் விழுந்து சமூகமும் ,அதன் பொருளாதாரமுமே பாதிக்கப்படும் என்பதே எமது கடந்த காலப்படிப்பினை ,எனவேதான் இம்முறை

பெரும்பான்மை மக்களின் பெரும்பாலானவர்களின் முடிவை ஆதரிப்பதன் மூலம் இந் நாட்டின் மீதான தேச பக்தியை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இத் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்வோம்.

"அரசியலை நாம் விரும்பாது விடின் ,நம்மை விரும்பாதவர்களின் ஆட்சியை நாம் அனுபவிக்க வேண்டி வரலாம். "

(பிளேட்டோ)

(சமூக ஆரோக்கியமான பின்னூட்டல்களே எதிர்பார்க்ப்படுகின்றன)

முபிஸால் அபூபக்கர்
மெய்யியல் துறை
பேராதனைப்பல்கலைக்கழகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -