நற்பிட்டிமுனையில் இடைநிலை ஆய்வு கூடமும்,ஆரம்ப கற்றல் வள நிலையமும் திறப்பு : பிரதம அதிதியாக ஹரிஸ் எம்.பி.


நூருல் ஹுதா உமர்-ருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பத்தாயிரம் மில்லியன் ரூபா செலவில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருக்கும் 500 பாடசாலை கட்டிடங்கள் இன்றைய நாளில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட இருக்கின்றது.

இந்த திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலயத்திற்குற்பட்ட நற்பிட்டிமுனை கமு/ கமு/ அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் 30 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வள நிலைய கட்டடமும்,கனிக்ஷ்ட இடைநிலை ஆய்வுகூட திறப்பு விழாவும் இன்று மாலை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது
பாடசாலையில் அதிபர் பி.முஹம்மட் சம்ஸம் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கெளரவ அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் மற்றும் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ் அப்துக் ஜலீல் அவர்களும் கலந்து கொண்டனர்.
விசேட அதிதிகளாக சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ் ஆஸிக் அவர்களும்,மேலும் பல அரசியல் பிரமுகர்கள்,கல்விமான்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இவ் திட்டத்தின் கீழ் கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு 9 கட்டங்கள் இன்றைய நாளில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -