தேசிய போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற சாதனை வீரர் பாடசாலையிலும்,வைத்தியசாலையிலும் கௌரவிக்கப்பட்டார்.படங்கள்.



பழுலுல்லாஹ் பர்ஹான்-
னக்கு ஒரு கால் இல்லாத போதும் விளையாட்டுக்கு ஊனம் எவ்விதத்திலும் தடை கிடையாது என்பதை நிரூபித்து தேசிய பரா மெய்வல்லுனர் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த சாதனை வீரர் எம்.எம்.அஹமட் அனீக் இன்று 12 வியாழக்கிழமை காத்தான்குடி அந்நாஸர் மகா வித்தியாலயம்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவு என்பவற்றினால் கௌரவிக்கப்பட்டார்.
காத்தான்குடி அந்நாஸர் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலை அதிபர்,உப அதிபர்கள்,ஆசியர்கள்,மாணவர்கள் சார்பாக அந்நாஸர் மகா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அல்லாப்பிச்சையினால் சாதனை வீரர் எம்.எம்.அஹமட் அனீக் வெற்றிக் கிண்ணம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
அத்தோடு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவு ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வில் வைத்தியசாலை புற்று நோய் பிரிவு வைத்தியர்கள்,தாதியர்கள் சார்பில் புற்று நோய் வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.இக்பாலினால் சாதனை வீரர் எம்.எம்.அஹமட் அனீக் மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இதே வேளை அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் சிப்லி பாறூக்கினால் சாதனை வீரர் எம்.எம்.அஹமட் அனீக் பொன்னாடை போர்த்தி பணப் பரிசு வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -