அஸ்ரப் ஏ சமத்-
முன்னாள் அமைச்சர் நாவின்ன இன்று மீண்டும் ஜ.தே.கட்சியுடன் இணைந்து கொண்டாா் அத்துடன் எதிா்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அமைச்சா் சஜித் பிரேமதாசாவுக்கு குருநாகல் மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்குகளை பெற்றுத் தருவதாக உறுதியளித்தா். கொழும்பு 7 ல் உள்ள சென் மோா் கிரஸன்ட் அமைச்சா் மங்கள சமரவீர அவா்களின் அலுவலக இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியாலாளா் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு முன்னாள் அமைச்சா் நாவின்ன தெரிவித்த்தாா்.
அத்துடன் இங்கு கருத்து தெரிவித்த அமைச்சா் சஜித் பிரேமதாச எனது வெற்றிக்காக எதிா்க் கட்சிகளில் யிருந்து எவரும் முன் வரலாம் அவா்களுக்காக எனது கதவுகள் என்றுமே திறந்து இருக்கின்றது. அதற்காக அழைப்பிதழ் விடுக்கின்றேன். எனத் தெரிவித்த்தாா். எனது தோ்தல் விஞ்ஞாபனம் உரிய காலத்தில் வெளிவரும் எனது கொள்கை அடிப்படையிலும் இந்த நாட்டில் வாழும் மக்களது இலட்சியத்தினை அவா்களை கட்டி எழுப்புவதே எனது நோக்கம். மாத்தறையில் கிரிந்தெனியவில் முஸ்லிம் களது வீடுகள் உடைக்கப்பட்ட சம்பவம் பற்றி நாம் பெரிதும் கவலையடைகின்றேன்.
சிலா் இவ்வாறு சிறுபான்மையினா்களளுக்கிடையே இனவாத அரசியலைப் புகுத்தி மக்களை இனக்குரோதத்தினை உண்டு பன்னி அதில் குளிர் காய நினைக்கின்றனா். நான் ஒருபோதும் இனவாதத்தினை அடியோடு எதிா்ப்பவம். சகல மக்களும் இலங்கையன் என்ற ரீதியில் சகோதரத்துவடன் நாம் அனைவரும் இந்த நாட்டில் வாழவேண்டும்.
எனத் தெரிவித்தாா். நான் அண்னம் சின்னத்தில் கேட்பது அல்லது சில ஒப்பந்தங்கள் நிபந்தனைகள் அடிப்படையில் நான் ஜனாதிபதி தோ்தல் குதிப்பது பற்றி சில எதிா்க்கட்சிகளும் சில ஊடக நிறுவனங்கள் கட்டும் கட்டுக் கதைகளாகும். அவ்வாறு எவ்வித உண்மையும் இல்லை எனவும் அமைச்சா் சஜித் பிரேமதாச தெரிவித்தாா்.
அத்துடன் நான் சகல வசதிகளும் கொண்ட எனது விருப்பமான வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சினை ஜனாதிபதியான பின்பும் பொறுப்பேற்றால் நகர கிராமியம் எனற வீடமைப்புக் கூறுகள் இல்லாமல் சகல வீடமைப்புத்துறைகளையும் ஒரு கூறையின் கீழ் கொண்டுவந்து சிறந்ததொரு அமைச்சாக அதனை உருப்பெற்று இந்த நாட்டில் வாழும் சகல வீடற்ற மக்களுக்கும் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் தெரிவித்தாா்.