இராணுவம் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கை-கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டத்தின் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து இரு ட்ரக் வண்டிகளில் சுமார் 50க்கும் அதிகமான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குறித்த தேடுதலில் ஈடுபட்டனர்.
வெள்ளிக்கிழமை(27) மாலை 4 மணி முதல் குறித்த தேடுதல் நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டதுடன் கல்முனை சாய்ந்தமருது பகுதி எல்லையில் அமைந்துள்ள மையவாடி மற்றும் தனியார் மரக்காலைகளில் ஸ்கானர் இயந்திரங்களை பயன்படுத்தி இராணுவத்தினரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் குறித்த பகுதி வீதிகள் இராணுவத்தினரால் போக்குவரத்திற்காக மறிக்கப்பட்டதுடன் செய்தி சேகரிப்பிற்காக சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
எனினும் எதுவித ஆயுதங்களோ தடயப்பொருட்களோ குறித்த தேடுதலில் சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -