இறை தூதரின் அரப்பணிப்பு, அளவிலா அறிவு, தியாகம் என்பனவற்றின் வழிவந்த ஈகைத் திருநாள், அர்ப்பணிப்பின் அடையாளமாய் இன்றும் என்றும், இச்சித்தாந்தத்தில் ஒரு முகமான சித்தாந்தங்களை நோக்கி எம்மை ஈர்த்தனவாய்.
சுயநலமற்ற வாழ்வு முடிவிலியானது என்பதனை ஈகைத் திருநாள் என்றென்றும் எமக்கு நினைவூட்டும் அதேவேளை, தியாகம் சமாதானத்தின் ஒளிவிளக்கு, தியாகத்தின் ஊடான சமாதானம் என்பன ஒவ்வொரு ஆதமாவும் இன்றைய உலகில் மனங்கொள்ள வேண்டிய அம்சங்களில் ஒன்றாகும் என்பதனை பறை சாற்றுகின்றது.
இறைகோட்பாடுகள் மறப்பதற்கன்றி மானிட உலகில் மதங்களைத் தாண்டி மனிதங்களிடையே நல்வாழ்வை வழிப்படுத்த எமக்கு என்றும் துணை புரிபவை.
இன்று இனிய தியாகத் திருநாள் ´ஈதுல் அழ்ஹா´ ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய நல்லுள்ளங்கள் அனைவருக்கும் எனது ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -