தனியாகவே இருந்த சாய்ந்தமருது, இப்போது ஊருக்காக போராடுகிறோம் என்கின்ற சிலரின் நேரடி அனுசரணையுடன் இரவோடு இரவாக 1987 ஆன்று, வேறு பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டு அடிமைச்சாசனம் எழுதப்பட்டது.
காலம்செல்லச் செல்ல தாங்கள் அடிமைகளாக்கப்பட்டுள்ளோம் என்பதை சாய்ந்தமருது மக்கள் உணரத்தொடங்கினர். முடிவு பல்வேறு முஸ்தீபுகளை எடுத்தனர். இவர்களின் முயச்சியால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் பிரதேச செயலகத்தை வழங்கினார். இது சாய்ந்தமருதுக்குக் கிடைத்த பொன்னான சந்தர்ப்பம் என்றே கூறவேண்டும்.
சாய்ந்தமருதின் மக்கள் பரம்பல் அதிகரிக்கவே அவர்களது பிரதேசத்தை அவர்களே பராமரிக்கவேண்டிய நிலை உருவாகியது. கல்முனையின் நிருவாக அமைப்பினால் சாய்ந்தமருதுக்கான பணிகள் சரியான முறையில் கையாளப்படவில்லை என்ற நிலை உருவானது. சண்டை சச்சரவுகள்கூட ஏற்ப்பட்டது.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிமன்றத்தின் அவசியம் மக்கள் மயமானது இதனை பெற்றுக்கொள்ள ஒரு மத்திய நிலையம் அவசியப்பட்டது. பள்ளிவாசல் இதற்கு பொருத்தமானதாக எடுத்துக்கொள்ளப்பட்டது. பல்வேறு சந்திப்புக்கள் கலந்துரையாடல்கள் என முயச்சிகள் தொடர்ந்தன.
கலாநிதி ஏ.எம்.ஜெமீல் இந்த விவகாரத்தை கையிலெடுத்தார். வெறும் பேச்சுவார்த்தைகளின் ஊடாக மட்டும் உள்ளுராட்சிமன்றத்தை பெற்றுவிடமுடியாது என்பதை உணர்ந்த அவர் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மாகாணசபையில் தனிநபர் பிரேரணை ஒன்றைக்கொண்டுவந்து நிறைவேற்றி அந்த பொறுமதியான ஆவணத்தை பள்ளிவாசல் தலைவரிடம் ஒப்படைத்ததோடு மட்டும் நின்றுவிடாது சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிமன்றத்துக்காக பலமாக குரல்கொடுக்க ஆரம்பித்தார்.
கட்சிகளின் தலைவர்கள், சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் என பல்வேறுபட்டவர்களுடன் உரையாடல்களிலும் ஈடுபட்டார்.
தனது ஊர் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக அரசியல் கட்சி தலைவர்களுடனும் முறண்பட்டார். முடிவு இன்னும் விடியாத பொழுதாகவே இருந்து வருகின்றது.
சுமார் 20000 வாக்காளர்களைக் கொண்ட சாய்ந்தமருதை அரசியல் ரீதியாக தலைமை தாங்க காலத்துக்குக் காலம் பலர் வந்தபோதும் இன்றைய சூழலில் ஜெமீல் என்ற ஆளுமையை சாய்ந்தமருது மக்கள் நோக்குவது சகலரும் அறிந்த விடயமாகும்.
உள்ளூர், தேசியம் மற்றும் சர்வதேச மட்டத்தில் பணியாற்றிய அனுபவங்களைக்கொண்ட ஜெமீல், அவர் பிறந்த சாய்ந்தமருது மக்களது அபிலாஷைகளை அடைந்துகொள்ள முன்வரவேண்டும். அரசியல் தலைமைத்துவமின்றி எடுப்பார் கைப்பிள்ளையாக சாய்ந்தமருது ஆகிவிடக்கூடாது. பள்ளிவாசல் நிர்வாகமும் சுயட்சைகுழுவினரும் நிலைமையை உணர்ந்து செயற்பட வேண்டும்.
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிமன்றம் என்ற அந்த அடைவை பெற்றுக்கொள்ள இன்னும் முயச்சிக்க வேண்டும். ஊரின் உள்ளுராட்சிமன்ற கோரிக்கைக்காகவே தனது அரசியல் பயணத்துக்கு இடைவெளி கொடுத்துள்ள ஜெமீல் மீண்டும் அந்த பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்பது பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பு.
சாய்ந்தமருதில் படித்தவர்கள் பணக்காரர்கள் இருக்கின்றார்கள் ஆனால் அரசியல் ரீதியில் இப்போதைக்கு பண்பட்டவர் ஜெமீல் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இவர் சாய்ந்தமருதுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
தியாகத் திருநாளைக் கொண்டாடிய கையோடு ஜெமீல் சாய்ந்தமருத்துக்கான தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
