வேலையில்லா வெளிவாரி பட்டாரிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் தீர்வு,விரைவில் 8000 வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம்_பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
வேலையில்லா வெளிவாரி பட்டாரிகளுக்கு மூன்று வாரங்களுக்குள் தீர்வு,விரைவில் 8000 வெளிவாரி பட்டதாரிகளுக்கு நியமனம்

வேலையில்லா வெளிவாரி பட்டதாரிகளுக்கும் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் ஆகியோர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (11) ஞாயிற்றுக் கிழமை கிண்ணியா அல் அதான் பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றுள்ளது.அம்பாறை,திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் கலந்து கொண்ட இச் சந்திப்பில் தங்களது வெளிவாரி பட்டங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டும் தொடர்பாக பிரதியமைச்சரிடத்தில் கோரிக்கை விடுத்தனர் இது தொடர்பில் பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கருத்து தெரிவிக்கையில்
அண்மையில் உள்வாரி பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது வழங்கப்பட்ட 16800 உள்வாரி பட்டதாரிகளுக்குள் 800 பட்டதாரிகள் வெளிவாரி பட்டதாரிகள் மிகுதியான பட்டதாரிகள் விரைவில் உள்வாங்கப்படவுள்ளார்கள் இதற்கான ஆரம்ப கட்டமாக 8000 நியமனங்கள் வழங்கப்படவுள்ளது இது தொடர்பாக தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் அமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, செயலாளர் வீ.சிவஞானசோதி ஆகியோர்களை சந்தித்து இது விடயமாக கூறியுள்ளேன் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும் வெளிவாரி என்ற பாரபட்சமின்றி அரச துறையில் நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதில் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ஏ.எச்.ஜெஸீர்,கிண்ணியா வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் நிஹ்மத்துள்ளா உட்பட பல நூற்றுக்கும் மேற்பட்ட வெளிவாரி வேலையற்ற பட்டதாரிகளும் கலந்து கொண்டார்கள்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -