நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாஸா அவர்களை ஜனாதிபதி வேட்பாளராக களமிரக்க வேண்டும.; என்று கட்சியில் பெரும்பான்மையான அங்கத்தவர்களும் பொது மக்களும் விரும்புகின்றனர்.அதனையே நாங்களும் விரும்புகின்றோம்.அவ்வாறு செய்யாது வேறு ஒருவரை நியமித்தால் நாங்கள் சுயேட்சை வேட்பாளராக சஜித் பிரேமதாஸா அவர்களை களமிரங்குமாறு வலியுறுத்துவோம்.
ஆனால் ஒரு சிலர் இன்று அதற்கு எதிராக நிற்கின்றனர.; ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸா அவர்களை கயமிரக்காவிட்டால் அது வேறு ஒன்றுக்குமல்ல பொது ஜன பெரமுனவில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ஸ அவர்களை வெற்றி பெறச் செய்வதற்கே அத்தோடு ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்காலமும் முடிந்து விடும் என மக்கள் தேசிய ஒன்றியத்தின் அழைப்பாளர் சமீர பெரோ தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (11) திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்;ந்து கருத்து தெரிவிக்கையில் பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கவுள்ளது.அது யார் என்று முழு நாட்டு மக்களுக்கும் தெரியும் மஹிந்த ராஜபக்ஸ குடும்ப அங்கத்தவரை தவிர வேறு எவருமாக இருக்க முடியாது.
அவர்கள் இன்று சொல்கிறார்கள் புதிய ஒரு நாடு புதிய ஒரு தலைவர் என்று அவர்களின் தலையாய வாசகத்தினை ஆரம்பித்துள்ளாரகள் கோத்தபாய ராஜபக்ஸ இந்த நாட்டின் புதிய தலைவரா?அவர் எவ்வாறு பதிய நாட்டை உருவாக்குவார.; அவர்களின் காலத்தில் தான் இந்த இங்கிலாந்தின் குப்பை வரவழைக்கப்பட்டுள்ளது. ரானுவ பாது காப்பு தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது.சீனாவிலிருந்து பாரிய அளவில் கடன் சுமை பெற்று இந்த நாட்டை கடன் கார நாடாக மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர் எவ்வாறு இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
