கல்முனை மண்ணின் வரலாறுகளை, அதன் தொன்மைகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் அங்கமாக கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் , கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா நிருவாகத்தின் ஒத்துழைப்புப்புடன் கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம்
இணைந்து வரலாற்றுச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் தொடர்பான அறிமுகம் கொண்ட
நினைவுப் படிகம் திரை நீக்கம் செய்யும் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 20.07.2019 தொடர்ந்து இரவு 8.00 மணிக்கு பள்ளிவாசல் முன்றலில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கல்முனை மாநகரில் நெடும் வரலாறு கொண்ட ஒரு புராதனம் மிக்கதாய் இவ் கடற்கரைப் பள்ளிவாசல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
