இவ்வாறு கிழக்குமாகாண ஆளுநர் சான் விஜலால்டிசில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ஒரு குவளை பசும்பால் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கிழக்கு மாகாணத்திற்கான பிரதானநிகழ்வு இன்று (22) செவ்வாய்க்கிழமை நாவிதன்வெளிஅன்னமலை மகாவித்தியாலயத்தில் கிழக்குமாகாணகல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்றபோது பிரதமஅதிதியாகக்கலந்துகொண்ட ஆளுநர் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
.இந்நிகழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் வரவேற்புரை நிகழ்த்த கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் கே.ஜி.முத்துபண்டா கௌரவ அதிதியாகக்கலந்து கொண்டார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில்:
பின்தங்கிய பிரதேசத்திலேயுள்ள இப்பாடசாலைக்கு ஒரு ஒன்றுகூடல் மண்டபம் இல்லையென்ற குறைபாடு இங்கு கூறப்பட்டது. ஒரு 1ஏபி பாடசாலைக்கு இவ்வாறானதொரு நிலைமை காணப்படுவது நல்லதல்ல.எனவே 2020க்குள் இங்கு ஒரு மண்டபம் அமைக்கப்படும்.
அதுபோல இங்குள் பாண்ட் வாத்தியக்குழுவை நவீனமயப்படுத்த உடனடியாக நிதிவழங்கவுள்ளேன். தேவையான மதிப்பீட்டை பெற்றுவலயக்கல்விப்பணிப்பாளருடாக அதிபர் அனுப்பிவைத்தால் மறுகணம் அத்தொகையை அனுப்பிவைப்பேன். என்றார்.
மாகாணகல்விச்செயலாளர் கே.ஜி.முத்துபண்டா பேசுகையில்:
மாணவர்க்கு உணவு வழங்குவதென்பது பலவருடகாலமாக நடைபெற்றுவருகிறது. அதற்கு மேலதிகமாக இப்பசும்பால் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி அமுல்படுத்திவருகிறார்.
இங்கொரு ஒன்றுகூடல் மண்டபமில்லாக்குறையை அறிவிப்பாளர் சகா எடுத்துக்கூறினார். அதனை நிறைவேற்ற உதவிசெய்வோம்.
9வது இடத்திலிருக்கும் கிழக்குமாகாணத்தின் கல்வித்தரத்தை உயர்த்தஅனைவரும் ஒத்தழைக்கவேண்டும். என்றார்.
விழாவில் ஆளநருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.பாடசாலையால் நினைவுச்சின்னமும் வழங்கிவைக்கப்பட்டது.தேசிய பசும்பால் வழங்கலை ஆளுநர் மாணவர்க்கு வழங்கிவைத்தார்.
நாவிதன்வெளிமாணவரின் கலைறிகழ்ச்சிகள் மேடையேறின. பிரதிஅதிபர் திருமதி நிலந்தினி ரவிச்சந்திரன் நன்றியுரைவழங்கினார்.