நாடு முழுவதும செறிந்து வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினை கருத்தில் கொண்டு அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக பல்வேறு கட்சியில் ஒன்றிணைந்து இன்று ஒரு புதிய கூட்டணியினை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையில் முன்னெடுத்துள்ளது.
இக்கூட்டமைப்பின் முதலாவது சந்திப்பு இன்று (11) கொட்டகலை தொண்டமான் தொழிநுட்ப கேட்போர் கூடத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டமைப்பில் ஜனநாயக போராளிகள் கட்சி,ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன இன்றைய தினம் இணைந்து கொண்டன.
இந்த கூட்டமைப்பு நாடு முழுவதும் உள்ள சிறு கட்சிகளை ஒன்றினைத்து பாரிய கூட்டமைப்பாக முன்னெடுக்க இருப்பதாகவும், இதனுடன் இணைவதற்கு அனைவரையும் அழைப்பதாகவும் இங்கு உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பொதுச் செயலாளர் அனுசா சிவராஜா,நாடாளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம்,ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான்,மத்திய மாகாண சபை முன்னாள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்,மற்றும் உறுப்பினர்களான கணபதி கணகராஜ்,பிலிப்,சத்திவேல்,உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், உட்பட முக்கியஸ்தர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாகவும்,ஜனநாயக போராளி கட்சியின் செயலாளர் இ.கதிர்,ஜனநாயக மக்கள் காங்கிரஸஸின் பொதுச்செயலாளர் நடேசன் நித்தியா நந்தன்,தலைவரும் பிரபா கணேசன் உட்பட முக்கியஸத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.