பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம் - அல் அமான் அதிபர் எம்.ரீ.எம். ஆதிம்



ஐ. ஏ. காதிர் கான்-
பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். எமது பாடசாலையில் பல மாணவர்களின் வயதுக்கேற்ற வளர்ச்சி காணப்படவில்லை. துடிப்பு மிக்க மாணவர்களினால்தான், கல்வியில் முன்னேற முடியும். இதனை கருத்தில் கொண்டுதான், எமது பாடசாலையிலும் உடல் ஆரோக்கியப் பயிற்சி முகாம் ஒன்றை நடாத்தத் தீர்மானித்தோம் என, அல் அமான் அதிபர் எம்.ரீ.எம். ஆதிம் தெரிவித்தார்.
மினுவாங்கொடை, கல்லொழுவை, அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கான உடல் ஆரோக்கிய பயிற்சி முகாம், வித்தியாலய முற்றவெளியில் (20) சனிக்கிழமை காலை இடம்பெற்றது. அதிபரின் அழைப்பின் பேரில், அகில இலங்கை ஊஷூ சம்மேளனத்தின் பிரதித் தலைவர் "மார்ஷல் ஆர்ட்" எம்.எம். பாஸில், இப்பயிற்சி முகாமை வழி நடாத்தி வைத்தார்.
இப்பயிற்சி முகாமை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிபர் இந்நிகழ்வில் மேலும் பேசுகையில்,
இந்தப் பயிற்சி முகாமை, வார இறுதி நாட்களில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல, கஹட்டோவிட்டயைச் சேர்ந்த "மார்ஷல் ஆர்ட்" எம்.எம். பாஸிலுக்கு அழைப்பு விடுத்தோம். அவர் எமது அழைப்பை ஏற்று, இங்கு வருகை தந்து பயிற்சி முகாமை நடாத்துவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
நாம் வார நாட்களில் ஐந்தாம் ஆண்டு முதல் மேல் வகுப்பு மாணவர்கள் வரை இப்பயிற்சி முகாமை முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளோம். முழு அளவிலான உடற் பயிற்சித் திட்டமொன்றையும் மேற்கொள்ளவுள்ளோம். இதன்மூலம், எதிர்காலத்தில் மாணவர்களின் மறைந்துபோன திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிக்கொணர முடியும் என நம்புகின்றோம். இப்பயிற்சி முகாம், தொடர்ந்தும் இடை விடாது முன்னெடுக்கப்பட வேண்டும். இதற்காக பாடசாலை நலன் விரும்பிகளினதும், பெற்றோர்களினதும் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
இப்பயிற்சி முகாமில், அல் அமான் பிரதி அதிபர் எம்.எம்.எம். றிம்ஸான், உதவி அதிபர் எம்.எஸ்.எம். றிழான் ஆகியோரும் பங்கேற்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -