அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ரத்மல்கஹவெவ மஹா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பெவிலியன் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் 2019.07.17 அன்று பாடசாலை சமூகத்திடம் வைபக ரீதியாக கையளிக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் தலைமையில் அண்டைபெற்ற இந் நிகழ்வில் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சஹீது, கஹட்டகஸ்திகிலிய பிரதேச சபையின் தலைவர் திலகரத்ன, பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பாடசாலை பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டார்.






