கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ் மைதானம் மிக நீண்ட நாட்களாக புனரமைப்புச் செய்யப்படாமை மிக மோசமான நிலையில் காணப்பட்டதையடுத்து அப்பிரதேச வட்டாரத்தின் கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
குறித்த விளையாட்டு மைதானமானது திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 45 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்படவுள்ளது.
கம்பரெலிய திட்டம் ஊடாக 30 இலட்சம் ரூபாவிலும் , வர்த்தக வாணிப கைத்தொழில் முன்னால் அமைச்சின் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் கீழ் இயங்கும் மீள்குடியேற்ற செயலணி திட்டம் ஊடாகவும் 15 இலட்சம் ரூபா செலவில் விளையாட்டு மைதானத்தின் விளையாட்டு அரங்கு புனரமைக்கப்படவுள்ளது .
இதற்கான ஆரம்ப கட்ட வேலைத் திட்டங்களை நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் இன்று (18) வியாழக் கிழமை பார்வையிட்டார்.