வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் கடந்த வருட நிதி ஒதுக்கீடு மூலம் பெறப்பட்ட சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை,முசலி தேசிய பாடசாலை,நானாட்டான் மன்/டிலாசேல் கல்லூரி
ஆகிய இடங்களில் வைத்து மன்னார் கல்வி வலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் மேற்படி பாடசாலைகளில் வெகு விமர்சையாக இடம்பெற்றன.
மன்னார் பகுதியில் 385 மாணவர்களுக்கும்
முசலிப் பகுதியில் 205 மாணவர்களுக்கும்
நானாட்டான் பகுதியில் 225 மாணவர்களுக்கும்
மேற்படி உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
மாணவர்களின் கல்வி உயர்ச்சியை தனது மூச்சாய்க் கொண்டு செயற்பட்டு வரும் கெளரவ காதர் மஸ்தான் அவர்களின் அரும்பணிகளின் தொடர்ச்சியாகவே மேற்படி கற்றல் உபகரணங்கள் வழங்கும் பணி இடம்பெறுகிறது.
இந் நிகழ்வில்
மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் ஜே.கே.பிரட்லி மாந்தை மேற்கு பிரதேச சபை பிரதித் தவிசாளர் எம்.எச்.தெளபீக் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப். சாபிர் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப். ராசிக் பரீட் முசலி தேசிய பாடசாலை பிரதி அதிபர் ஜனாப்.சகாப்தீன் நானாட்டான் மன்/டிலாசேல் கல்லூரி
அதிபர் அருட் சகோதரர் விஜயதரன் மற்றும் பெற்றோர்,பாடசாலை சமூகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.