திருகோணமலை-மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று (15) வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பொஷன் தினத்தை முன்னிட்டு பிரதேசத்தில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கத்தையும், நட்புணர்வை வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வில் அனைத்து இனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர்.
அத்துடன் திருகோணமலை பொது வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரால் இரத்தம் வழங்குவது பற்றி யும், இரத்தம் யாருக்கு பாவிக்கப்படுகின்றது, இரத்தம் வழங்குவதனால் எவ்வாறான நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றியும் கொடையாளிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த இரத்ததான நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்நிகழ்வில் முஸ்லிம் இளைஞர்கள் அதிகளவில் கலந்துகொண்டு இரத்தம் வழங்கிய இரத்த தான நிகழ்வு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.