தமிழரசு கட்சியின் மாநாடு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரகளின் உறவுகள் போராட்டம்(வீடியோ)

பாறுக் ஷிஹான்-
மிழரசு கட்சியின் மாநாடு நடைபெற்ற யாழ்.வீரசிங்கம் மண்டபம் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவரகளின் உறவுகள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
இன்று(30) ஞாயிற்றுக்கிழமை இலங்கைத்தமிழ்அரசுக்கட்சியின்16 ஆவது தேசியமாநாடு யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சோ. சேனாதிராஜா தலைமையில் மாநாடு ஆரம்பமாகி நடைபெற்று கொண்டிருந்தது.

இதன் போது கட்சியின் தேசிய மாநாட்டை குழப்புவதற்காக காணாமல் போனவர்களின் உறவுகள் சம்பவ இடத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் நடைபெறும் மண்டபத்தை சுற்றி நெருங்காமல் கடும் பாதுகாப்பு போடப்பட்டது.
எனினும் காணாமல் போன உறவுகளை தேடி போராட்டம் நடத்தி வரும் உறவுகள் மண்டபத்தின் முன்பாக போராட்டம் வருகை தந்ததுடன் பல்வேறு கோசங்களை எழுப்பி தமிழ் தேசிய தலைமைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் வவுனியா பகுதியில் இருந்து பஸ்களில் வந்து இறங்கிய காணாமல் போன உறவுகளை தேடி போராட்டம் நடத்தி வரும் உறவுகளை வந்து போராட்டத்தை மேற் மேற்கொண்டதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் மண்டபத்தை நெருங்க விடாமல் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -