கல்முனை விவகாரத்தில் ஹரிஸ் எம்.பி பேசப்போவது என்ன? : நாளை 10.30க்கு "360" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் !!


நமது செய்தியாளர்-
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தும் ஒருவராக இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் நாளை (01) இரவு 10.30 மணியளவில் சிங்கள மக்கள் உட்பட நாட்டின் அதிகமான மக்கள் பார்வையிடும் தெரண தொலைக்காட்சியின் அரசியல் விவாத நிகழ்ச்சியான "360" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் மறைந்திருக்கும் மர்மங்களையும், அந்த செயலக தரமுயர்த்தலில் இருக்கும் சிக்கல்களின் விளக்கங்களையும் நாட்டுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய தேவைப்பாடு உள்ள இந்த காலகட்டத்தில் இந்த விவாத நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்துகொள்ள உள்ளார்.

அண்மையில் எழு நாட்களாக தமிழ் அரசியல்வாதிகளின் பங்குபற்றலுடன் கல்முனை விகாராதிபதி தலைமையில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் தரப்பு, கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளின் பங்குபற்றலுடன் சத்தியாகிரகம் இருந்த முஸ்லிம் தரப்பு என அதி உச்ச சூட்டில் ஒட்டுமொத்த நாடும் அவதானித்த கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை புகைந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் இந்த விவாத நிகழ்ச்சியில் என்ன பேசப்போகிறார் என தமிழ், முஸ்லிம் மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், கல்முனை உள்ளுராட்சி மன்ற பிரிப்பு, கல்முனை பிராந்திய அபிவிருத்தி நிலை, நாட்டு நடப்பில் முஸ்லிங்களின் அண்மைய நிலைமைகள், ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிங்களின் நிலைப்பாடுகள், அமைச்சர்களின் கூட்டு இராஜினாமாவின் தேவைப்பாடுகள் பற்றி பல மர்மங்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -