மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா குமரி தோட்டம் என்று அழைக்கப்படுகின்ற ஸ்ரப்பி தோட்டத்தில் விளையாட்டு மைதானம் ஒன்று இல்லாததன் காரணமாக இளைஞர்களும் சிறுவர்களும் தமது பொழு போக்கினை விணே செலவு செய்து வந்தனர்.
இதனால் இளைஞர் மது பானத்திற்கும் இன்றும் சிலர் வேறு பொழு போக்கு அம்சங்களுக்கும் உள்ளாகியிருந்தனர. இதனை கண்காணித்த பிரதேச வாசிகள் இளைஞர்களும் சிறுவர்களும் பயன் தரு வகையில் தங்களது நேரத்தை செலவு செய்ய வேண்டும். என்று எண்ணி ஒவ்வொருவரிடமும் இருந்து பணம் சேர்;த்துக்கொண்டு தோட்ட நிர்வாகத்திடமிருந்து நிலத்தினை பெற்று இன்று ( 27 ) விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைப்பதற்கு முன்வந்துள்ளனர்.
இந்த விளையாட்டு மைதானத்திற்கு சுமார் ஏழு லட்சம் ரூபா செலவு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள போதிலும் இவர்களால் மூன்று லட்சம் ரூபாவே சேர்ப்பதற்கு முடிந்துள்ளது.
எனினும் காலம் தாழ்த்தாது எவ்வாறாவது இந்த விளையாட்டு மைதானத்தினை அமைக்க வேண்டும். என்ற உத்வேகத்தில் பொது மக்களும் இளைஞ்களும் இணைந்து இந்த விளையாட்டு மைதானத்தினை அங்ரார்ப்பண நிகழ்வினை ஆரம்பித்து வைத்து சிரமதான பணியிலும் ஈடுபட்டனர்.
மலையகத்தில் ஏனைய பிரதேசங்களை போல் தங்கள் பிள்ளைகளும் மிளிர வேண்டும் அவர்களுடைய திறமைகள் வெளி உலகத்திற்கு அறிமுகமாக வேண்டும் என்பதே இந்த பிரதேச தோட்ட மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
இது குறித்து இந்த பிரதேசத்திற்கு பொறுப்பாக இருக்கும் கிராம சேவகர் பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்