மலையக பகுதியில் சிறுவர் துஸ்பிரியோகங்களை கட்டுப்படுத்து விசேட வேலைத்திட்டம்.

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்- 
தேசிய மது ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு மலையக பகுதிகளில் அதிகரித்துள்ள சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் தற்கொலைகள் ஆகியனவற்றினை தடுப்பதற்கு பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் இணைந்து பொது மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை தெளிவு படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த வேலைதிட்டத்திற்குகமைவாக நேற்று பொகவந்தலா பொலிஸ் நிலையம் சிறுவர்களையும் பொதுமக்களையும் விழிப்பூற்றும் வகையில் பொது மக்களை விழிப்பூற்றும் வகையில் வீதி நாடகம் ஒன்றும் பொகவந்தலா பிரதேச பாடசாலை மாணவர்களை தெளிவு படுத்து வகையில் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் செயலமர்வு ஒன்றும் ஒழுங்கு செய்திருந்தது.
பொகவந்தலா பஸ்தரிப்பு நிலையத்திற்கு முன் நடைபெற்ற இந்த வீதி நாடக்த்தில் பெற்றோர்கள் போதைபொருளுக்கு அடிமையாவதனால் எவ்வாறு சிறுவர்கள் பாதிக்கின்றார்கள்.அவர்களின் கல்வி நிலை எவ்வாறு பாதிப்புக்குள்ளாகின்றது. என்றும் சிறுவர்கள் எவ்வாறான வேளையில் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகின்றார்கள் அதனை எவ்வாறு தடுக்கலாம் போன்ற விடங்கள் இந்த வழிப்புணர்வகளின் போது தெளிவுபடுத்தப்பட்டன.
இந்த செயலமர்வுக்கு தரம் 11 தொடக்கம் 13 வரையுள்ள பிரதேசத்தின் எட்டு பாடசாலைகளை சேர்ந்த சுமார் 500 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பொகவந்தலா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.பண்டார அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் உளவள வைத்திய நிபுனரும் சட்ட வைத்தியருமான இனோகா ரத்நாயக்க,லயாணி ரத்நாயக்க சட்ட வைத்தியர் ஹேவா வித்தாரண,ஹட்டன் பொலிஸ் கோட்ட பொலிஸ் அதிகாரி ரவிந்திர அம்பேபிட்டிய கோட்டம் 02 பொறுப்பதிகாரி அலுத்கம,உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான அனுசரனையினை பிரிடோ நிறுவனம் வழங்கியிருந்தது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -