க.கிஷாந்தன்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு 28.05.2019 அன்று கண்டிக்கு விஜயம் மேற்கொண்டு பௌத்த மத பீடங்களின் மஹாநாயக்கர்களை சந்தித்துள்ளனர்.
இந்த நிகழ்வின் போது அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயகர் அதிசங்கைக்குரிய வரக்காகொட ஞானரத்ன தலைமைத்தேரரை இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, மல்வத்து விஹாரைக்கு விஜயம் செய்த இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான குழு மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர் அதிசங்கைக்குரிய திப்பெட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தலைமைத்தேரரை சந்தித்ததுடன் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்போது, முன்னாள் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், கட்சியின் பிரதி பொது செயலாளர் ஜீவன் தொண்டமான் என கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் உடனிருந்தனர்.