முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை ஓரங்கட்ட நினைக்கும் தேசிய இனவாதத்தால் அமைச்சரையும் முஸ்லிம் சமூகத்தையும் ஒரு போதும் ஒரங்கட்ட முடியாது என்ன தியாகம் செய்தாயினும் நாம் எமது சமூகத்தையும் தலைவரையும் பாதுகாப்போம் என்று கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ. எம். அப்துல் மனாப் தெரிவித்தார்.
இது தொடர்பாக இன்று (29) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் சமுகத்தின் தலைமைத்துவ இடைவெளியை நிரப்புகின்ற ஒருவரான அமைச்சர் றிஸாட் பதியுதீன் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யான தேசிய இனவாத நடவடிக்கை என்பதுடன் பலரது அரசியல் இருப்பை பாதுகாக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுமாகும். இதனை வன்மையாக கண்டிப்பதுடன்
ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு சார்பாக குரல் கொடுக்க முன்வர வேண்டும்.
இனவாதிகள்தான் ஜனநாயக உயர் பாராளுமன்றத்திலும், ஊடகங்களை வைத்துக்கொண்டும் அமைச்சர் ரிஷாத் மீது வெறித்தனமான வதந்திகளையும், அவதூறுகளையும் பரப்பி ரிஷாத்தை அதிகாரத்தை விட்டும் தூக்கி ஜனநாயக ரீதியாக மக்களின் ஏகபோக தலைவராக
மக்கள் மனங்களில் வாழும் ஒரு முஸ்லிம் தலைவரை வேண்டுமென்றே பொய் குற்றச்சாட்டுக்களை வைத்து ஓரமாக்க நினைக்கும் இனவாதிகளின் படம் மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
தமிழ் தரப்பினரும், சிங்கள தரப்பினரும் மட்டுமல்லாது முஸ்லிம்களின் சில
அடிப்படை தெரியாதவர்களும் அமைச்சருக்கு எதிராக கருத்துக்களை வெளியிடுவதை
நிறுத்தி ஜனநாயக நீரோட்டத்திற்குள் வர முயற்சிக்க வேண்டும் என வேண்டுகின்றேன்
என்றார்.