சமயங்கள் மற்றும் சமூகங்கள் இடையே நல்லிணக்கம் ஏற்படும் வகையில் இப்தார் தின நிகழ்வுகள் தலவாக்கலையில் அனுஸ்ட்டிப்பு.

ஹட்டன் கே. சுந்தரலிங்கம்-
நாட்டில் ஏற்பட்ட அசாம்பாவிதங்களையடுத்து சமயங்கள் மற்றும் சமூகங்கள் இடையே இருந்து சகவாழ்வு சீர்குலைந்துள்ளன. இந்த சமயங்கள்,சமூகங்கள் இடையே, சகவாழ்வு மற்றும் ஒருமைபாடு மீண்டும் கட்டியெழுப்பும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வமத இப்தார் தின நிகழ்வு நேற்று ( 28) மாலை தலவாக்கலை ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெற்றன.
மௌலவி நியாஸ் ஹாஸ்மி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கடந்த 21 ம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதலில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து துவா பிரார்தனை ஒன்று இடம்பெற்றதுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்களை தெரிவிக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து நோம்பு துறக்கும் நிகழ்வு இடம்பெற்றது.இந்நிகழ்வில் பல்லின சமயத்தை சேர்ந்தவர்களும்,இனத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டதுடன் சமயங்களுக்கும் சமூகங்களுக்கிடையில் இடையில் ஏற்படும் முறுகல் நிலைகளை தவிர்ப்பதற்கு சமயங்களில் நடைபெறும், நல்ல நிகழ்வுகளில் அனைத்து சமயத்தைவர்களையும் கலந்து கொள்ள செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தினையும் இதன் போது அனைத்து சமயத்தை சேர்ந்தவர்களும் வழியுறுத்தினர்.
இதன் போது பிரதேசத்தின் ஒருமைபாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயப்படவும் தீர்மானித்தனர்.
இந்நிகழ்வுக்கு ஸ்ரீ சத்தாதர்மராமயின் விகாரதிபதி மடக்கும்புரே சமித்தஹிமி,தலவாக்கலை கதிரேச ஆலய பிரதமகுரு பிரம்ம ஸ்ரீ பரசாந்த் சர்மா சென் பற்ரிக் தேவாலயத்தின் வண பிதா,உட்பட மதத் தலைவர்களும்,தலவாக்கலை நகர சபையின் தலைவர் அசோக சேபால,உட்பட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த,ஜூம்மா பள்ளி வாசலின் மௌலவி நியாஸ் ஹாஸமி,நகர சபையின் தலைவர் அசோக சேபால.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -