வரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்திச்சடங்கின் எட்டாம் சடங்கு வைபவம் (27) திங்கட்கிழமை நடைபெற்றது.
பாதுகாப்பை முன்னிட்டு தொண்டர்கள் சோதனை இருந்தபோதிலும் நூற்றுக்ணக்கான பொங்கல் பானைகள் பொங்கப்பட்டன.
பாதுகாப்புகாரணத்திற்காக நடைபெற்ற எட்டாம்சடங்கிற்காக பொங்கல்பானை வைப்போர் பிற்பகல் 5மணிக்கு முதல் பானைகளை ஒப்படைக்கவேண்டுமென ஆலயநிருவாகம் கேட்டுக்கொண்டதற்கிணங்க சகலரும் பானைகயை வழங்கி சரியாக 5மணிக்கு பூஜை இடம்பெற்றது
கடந்த 13ஆம் திகதி கதவுதிறத்தலுடன் ஆரம்பமான இவ் வைகாசிச்சடங்கு கடந்த 21ஆம் திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவுற்றது.
அசாதாரணசூழ்நிலை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வைகாசிச்சடங்கு நேரகாலத்துடன் நடைபெற்றுமுடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.